Published on 05/02/2025 | Edited on 05/02/2025
ராணிப்பேட்டையில் கஞ்சா மற்றும் வலி மாத்திரைகளை போதைக்காக விற்று வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டையில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். ரகசிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை ஆற்காடு நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் இருவர் கஞ்சா விற்பதோடு வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக விற்று வந்தது தெரியவந்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீசார் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவும் ஆயிரத்து 1,015 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்னும் யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்பது தொடர்பாக இருவரிமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.