Skip to main content

காந்தி வழியில் வருடத்தில் ஒருநாளாவது இருக்க முயற்சி செய்யுங்கள்!

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

திருச்சியில் 89 வது ஆண்டு உப்புச்சத்தியாகிரக நினைவு யாத்திரை தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருச்சி டி.எஸ்.எஸ். ராஜன் பங்களா நினைவு ஸ்தூபத்திலிருந்து தொடக்க விழா நடைபெற்றது. 

 

thiruchy

 

இந்த நிகழ்ச்சியில் யாத்திரையை துவங்கி வைத்து பேசிய மத்திய திரைப்படத் தணிக்கைகுழு எஸ்.மதியழகன், காந்தியின் கொள்கைகளை நம் வாழ்க்கையை கடைபிடிப்பது மிகவும் கடினம். வாழ்நாள் முழுவதும் இருப்பதை விட வருடத்தில் ஒரு நாள் காந்தியின் வழியில் கடைபிடித்தால் போதும். அசைவம் உண்ணாமல், பொய் சொல்லாமல் வருடத்திற்கு ஒரு நாள் இருந்தால் போதும் அதுவே நாம் காந்தி வழியில் நடப்பதற்கு சமம். என்று பேசினார். 

 

திருச்சியில் துவங்கிய இந்த யாத்திரை ஸ்ரீரங்கம், திருவளர்ச்சிபட்டி, கல்லணை, திருகாட்டுப்பள்ளி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்ணியம், என பயணப்படுகிறார்கள்.

 

29ம் தேதி சர்தார் வேதரத்தினம் சிலை அருகே ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 

 

thiruchy

 

தொடர்ந்து 89 ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட மூத்த காங்கிரஸ் தியாகிகள் மட்டுமே சில மட்டுமே தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள யாரும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடதக்கது. 

 

திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் உயிரோடு இருந்தவரை இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பிறகு எந்த திருச்சி மாநகர காங்கிரஸ் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பது பெரிய ஏமாற்றமே ! .

 

 

 

சார்ந்த செய்திகள்