Skip to main content

திருச்சி சிறை பெண் வார்டன் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது! கல்யாணம் நிறுத்தம்!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்த அவர், கடந்த 3-ந்தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

suicide

 

 

 

இதில், அவரும் திருச்சி மத்திய சிறையில் வார்டனாராக பணியாற்றி வரும் வெற்றிவேலும் (24) காதலித்து வந்ததும், வெற்றிவேலுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததால், காதல் தோல்வியின் காரணமாக செந்தமிழ்செல்வி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

 

இதற்கிடையில் தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமான வெற்றிவேல் மீதும், சாதியின் பெயரை சொல்லி திட்டிய அவரது அண்ணன் கைலாசம், அவரது அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தெரிவித்திருந்தார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

mm

 

வெற்றிவேலும், அவரது அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகின்றனர். ராஜசுந்தரி திருச்சி மகளிர் சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தததால் 3 பேரும் தலைமறைவாகினர். வெற்றிவேலின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஆகும். 3 பேரையும் பிடிக்க கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

 

 

இந்த நிலையில் வெற்றிவேல் திருமானூர் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். மேலும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

mm

 

கைதான வெற்றிவேல் அளித்த வாக்குமூலத்தில், தான் செந்தமிழ்செல்வியை காதலிக்கவில்லை வேறு ஒருவரை காதலித்தேன். எனக்கும் அவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் தான் பழக்கம் என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 

 

 

இதற்கு இடையில் வெற்றிவேலுக்கு சுவாமிமலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த விவகாரம் தெரிந்ததும் அந்த திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில் செந்தமிழ்செல்வி அறையில் இருந்து ஒரு டைரி, அவரது செல்போனை கைப்பற்றியிருந்தனர். அந்த டைரியில்

செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் காதலித்து வந்தது பற்றி பல உருக்கமான தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.

 

.இதற்கு இடையில் காதலன், செந்தமிழ்செல்வி, அவருடைய அப்பா செல்லப்பன் பேசிய காதல், திருமணம், குறித்த ஆடியோ வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்