தமிழக சிலைகடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு கொடுக்காத நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஶ்ரீரங்கம் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள கலைப்பொருட்கள் கடந்த 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் திருடு போய்விட்டதாக திருச்சியை சேர்ந்த ரங்கநாதன் நரசிம்மன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி விரிவான விசாரணை செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஶ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், முரளி பட்டர், நந்து பட்டர், சுந்தர் பட்டடர், ஸ்தபதி சுவாமிநாதன், ஸ்தபதி முத்தையா, ஆகியோர் மீது, உள்பட 6 பேர் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.