Skip to main content

உலக தாய்ப்பால் தினத்தையொட்டி ஜிப்மரில்  நோயாளிகளின் உறவினர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்! 

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 அன்று உலக தாய்ப்பால் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இன்றைய சமுதாயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு 55 சதவீதம் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 

j

 

இதனால் தாய்ப்பால் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாரம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. அதனையொட்டி ஜிப்மர் மருத்துவமனை செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த நோயாளிகளின் உறவினவகளிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டனர். 

 
 

சார்ந்த செய்திகள்