Skip to main content

''தமிழகத்தில் வந்து இதை பேச சொல்லுங்கள்'' - தமிழிசைக்கு உதயநிதி பதில்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
"Come to Tamil and tell me to talk about this" - Udayanidhi's answer to Tamil

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி,' நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்' என பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்து பேசுகையில் கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், 'அவருடைய தாத்தா திட்டுவதென்றால் கூட அழகு தமிழில் திட்டுவார். நீங்கள் கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கும் பொழுது நாங்கள் கேட்கலாம் அல்லவா? இது என்ன உங்கள் வீட்டு காசா என்று கேட்கலாமா? பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு பிரதமரா காசு கொடுக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

அப்ப கலைஞர் உரிமைத்தொகை என்றால் கலைஞர் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறார்கள். இந்த மாதிரி வார்த்தைகளை முதலில் அடக்க வில்லை என்றால் உதயநிதியை ஒரு எதிர்மறை தலைவராக தான் இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கொள்ளப் போகிறது' என்றார். இதற்கு தற்போது பதில் கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'தெலுங்கானா ஆளுநரா அவரை தமிழ்நாட்டில் வந்து சொல்ல சொல்லுங்க இதெல்லாம்' என்ன பதில் கொடுத்தார்.

சார்ந்த செய்திகள்