Skip to main content

அடுத்தடுத்து 7 வீடுகளில் 100 பவுன் நகை திருடியவன் கைது !

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
t10

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் கொள்ளையனை பிடிக்க உதவி காவல் கண்காணிப்பாளர் சேகர் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைத்துக் கொள்ளயனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அங்கு சந்தேகத்து குறிய தோரனையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தினர். அப்போது அவருடைய முன்னுக்கு பின் முரணான பதில் போலி சாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.  இதனால் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு போலிசார் தனக்குரிய பாணியில் விசாரனை நடத்தினர்.  விசாரனையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகைதீன் மதார் சாகிப் மகன் சாதிக் எ பாரிஸ் கான் 28 என்பது தெரிய வந்தது.  மேலும் இவர் மீது கீழக்கரை ஏர்வாடி பரமக்குடி , ராமநாதபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன . மேலும் இதில் இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று உள்ளார்.      

                                                                                                                                                            
 சிறையில் இருக்கும் போது திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த சாகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது பின்னர் பாரிஸ் கான் விடுதலையாகி வெளியே வந்தவுடன் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் சாகுல் நடத்தி வந்த சூப் கடையில் வேலை பார்த்து வந்தார்.

 

 இந்நிலையில் பாரிஸ் கான் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இரவு நேரங்களில் சூப்பு கடையில் வேலை பார்த்து முடித்துவிட்டு பின் பூட்டிய வீட்டை நோட்டமிட்டுக் கொள்ளையடித்து வந்துள்ளதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.  அவ்வாறு கார்ட்டூன் அம்மன் நகரைச் சேர்ந்த சுரேஷ் குமார் வீட்டில் 54 நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி வீட்டில் அவரைச் சேர்ந்த ராஜேஸ்வரி வீட்டில் 100 பவுன் சோழமாதேவி மாணிக்க நகரைச் சேர்ந்த மாரிசாமி வீட்டில் இரண்டு பவுன் காலனியைச் சேர்ந்த வீட்டில் 15 பவுன் குண்டூரை சேர்ந்த மற்றும் கார்ட்டூன் பாலாஜி நகர் சேர்ந்த முத்துவேல் இரண்டு பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளார்.

 

 கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்த நகைகளை விற்று விற்று அதில் கிடைக்கும் பணத்தை செலவு செய்து வந்துள்ளார் இதையடுத்து பாரிஸ் கான் தான் கொள்ளையடித்த வீடுகளையும் நகையை அடகு மற்றும் பெற்றவை இடங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார் இதன் அடிப்படையில் போலீசார் 86 பவுன் நகையை மீட்டனர் மேலும் பாரிஸ் கானிடம் இருந்து கதவின் பூட்டு மற்றும் பீரோவை உடைக்க பயன்படுத்திய இரண்டு இரும்பு நாடுகளையும் பறிமுதல் செய்தனர் இதுகுறித்து போலீஸார் பாரிஸ் கான் மீது  வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்