Skip to main content

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆன ''தமிழக வேலை தமிழருக்கே''

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

திருச்சியில் பொன்மலை ரயில் நிலையத்தில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் தமிழர்கள் ரயில்வே வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கபடுவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

 

 Trend in Twitter '' Tamil work for Tamils ​​''

 

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் முன்பு தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து ரயில்வே பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

tamil

 

இந்நிலையில் தற்போது ''தமிழக வேலை தமிழருக்கே'' என்ற ஹெஷ்டாக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்