புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் ஆய்வாளர் உடலை சக பெண் போலீசாரும் உதவி கமிஷனர் தகன மேடை வரை சுமந்து சென்ற சம்பவம் எல்லோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஸ்ரீதேவி(48). இவருக்கு முருகன் என்ற கணவரும் வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இவர் மரணமைடைந்தார். அன்புடன் பழக கூடிய இவர் இறந்த செய்தியை கேட்டு மிகுதியான பெண் போலீசார் தண்டையார்பேட்டையில் திரண்டனர்.
ஸ்ரீதேவியின் உடலை அங்கு திரண்டிருந்த பெண் போலீசாரும் உதவி கமிஷனர் சுபலட்சுமியும் தகன மேடை வரை சுமந்து சென்றனர். இந்த நிகழ்வு தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள மக்களிடையே சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஆக்கியுள்ளது.