Published on 02/05/2018 | Edited on 02/05/2018
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் புழலில் மே தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,
![vaiko](http://image.nakkheeran.in/cdn/farfuture/swGSTpW4Jb554VP-cS6xE8y5yCzx8qrFv05cG3vcSNc/1533347626/sites/default/files/inline-images/IEAUG040_06-10-2017_17_12_43_0.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்தாலும் தமிழகத்திற்கு முட்டுக்கட்டை போடுவது உறுதி. தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. நரேந்திரமோடி நம்மை அழிக்க நினைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்காக யாரும் உணர்ச்சிவசப்பட்டு தீ குளிக்க வேண்டாம் எனக்கூறினார்.