Published on 23/03/2022 | Edited on 23/03/2022

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் ஆரம்பித்து நேர்காணல்வரை பல முறைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
மே மாதம் 21ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 5000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு மே 21ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.