Published on 06/02/2020 | Edited on 06/02/2020
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 30- மேற்பட்டவர்களை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசு ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடியால் கைதான சென்னை ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.