Skip to main content

2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

today corona rate in tamilnadu


தமிழகத்தில் 20 நாட்களுக்குப் பிறகு, இன்று 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,939 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 17,748 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 512 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 26-ஆவது நாளாக 1,000-க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,07,686 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 72,629 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இன்று மேலும் 2,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,25,258 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 14 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,454 ஆக அதிகரித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்