Published on 11/02/2019 | Edited on 11/02/2019

இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
கடந்த 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பட்ஜெட் மீதான விவாதம் பிப்.11 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் பிப் 13 ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவார்கள். துணைமுதல்வரும், முதல்வரும் பிப் 14 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்து பேசுவர்கள்.