Published on 11/02/2020 | Edited on 11/02/2020
கால்நடை மருத்துவத்துறையில் 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கால்நடை மருத்துவத்துறையில் உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மதுரை, கோவை திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு பிப்ரவரி 23- ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை தவிர்த்து இதர தேர்வு மையங்களை தேர்வு செய்த தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும்." இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்ததுள்ளது.