Skip to main content

கிணறு வெட்டும் பணியில் வெடி விபத்து; மூவர் பரிதாபமாக உயிரிழப்பு 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Three people tragically lost their lives explosion while cutting well

 

தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று பாசனத்தை வைத்தே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி மானாவாரி பகுதி என்பதால் பெரும் பாசனத்திற்கு கிணற்று நீரை நம்பியே இருக்கிறது. அந்த வகையில் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள இடத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது. அப்போது ஆனையப்பபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆசீர் சாம்சன் ஆகியோர் அங்கு கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணறு தோண்டுவதற்காக வெடி வெடித்துள்ளனர்.

 

இதில், எதிர்பாராத விதமாக கிணறு தோண்டுவதற்காக வைத்த வெடி வெடித்ததில் ஆனையப்பபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆசீர் சாம்சன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த பணியில் ஈடுபட்ட இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற ஒருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்