Skip to main content

ஆபாச நடனம் ஆடியதாக கூறி பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்: டி.எஸ்.பி. இன்ஸ்பெட்ருக்கு 2 லட்சம் அபராதம்

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
judgement


சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 

அதில், நான் எனது தோழிகளுடன் கடந்த 2014ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் தங்கி இருந்தோம். நள்ளிரவு ஒரு மணிக்கு லாட்ஜுக்கு வந்த அப்போதைய கொடைக்கானல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் ஆபாச நடனம் ஆடியதாக கூறி எங்களை கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
 

 

 

விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசினர். அத்து மீறியும் நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால் அதுபோன்ற பெண் போலீசார்கள் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தோம். இருப்பினும் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். ரூபாய் 7 லட்சம் கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
 

நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், கருணாகரன், மோகன்குமார் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. அவர்கள் இருவரும மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

 

 
மேலும, அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கிவிட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார். 

 


 

சார்ந்த செய்திகள்