தமிழ்நாட்டில் 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு காவிரி டெல்டாவை மையப்படுத்தி 2 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரம் நகரத்தை மையப்படுத்தி ONGC நிறுவனமும் மீத்தேன், ஹைட்ரோபன் எடுத்து வணிக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், உடன் கைவிட வலியுறுத்தி மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருவாருர் வரும்போது அக்டோபர் 3ம் தேதி மாலை 3 மணியளவில் விளமல் பாலம் அருகில் விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்போராட்டத்தை கைவிட்டு ஆளுநரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதால், இதனை ஏற்று தற்காலிகமாக கருப்புக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், இன்று (03.10.2018) மாலை 3 மணியளவில் தனது தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் திருவாரூர் விருந்தினர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து பேச உள்ளோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.