Published on 22/10/2020 | Edited on 22/10/2020

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவருக்கு வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் அரசியல் அமைப்புச் சட்ட சீர்குலைவு வழிகோலும் ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும். மருத்துவ படிப்பிற்கான 7.5 உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த முரண்பட்ட அணுகுமுறை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கையை சீர்குலைத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.