Published on 21/10/2021 | Edited on 21/10/2021

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய தமிழக எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குடலிறக்க நோயால் அறுவை சிகிச்சை செய்துள்ள எடப்பாடி பழனிசாமி தற்பொழுது எண்டோஸ்க்கோப்பி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.