Skip to main content

கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு வழக்குகள்... எச்சரிக்கை விடுத்துள்ள எஸ்.பி

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில் கமல் மீது தற்போது அவரக்குறிச்சியில் காவல்துறையினர் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

 

kamal

 

மத உணவர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கரூர் மாவட்டம் அவரக்குறிச்சி காவல்நிலையத்தில் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசுவது (153எ), ஒரு மதத்திற்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புவது (295எ) ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

அதேபோல் மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் குமார் தலைமையில் ஒன்று கூடிய 50 பேருக்கு மேற்பட்டோர் புகாரளித்தனர்.
 

நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து பத்திரிகை செய்தி அனுப்பிய கரூர் மாவட்ட எஸ்.பி விக்ரமன் மதம், இனம், சாதி சம்மந்தமாக வன்முறை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

கமல் பிரச்சாரம் செய்ய தடைகோரியும், அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 

இந்நிலையில் 'ஹிந்து தீவிரவாதி' பேச்சிற்காக கமல் மீது தொடரப்பட்ட வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் மே 16-ல் விசாரணைக்கு வரவுள்ளது.
 

கமலுக்கு எதிராக 'ஹிந்து சேனா' என்ற அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
 

இந்த வழக்கை மே 16 ஆம் தேதி மதியம் 2.30 க்கு விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 

இதற்கு இடையில் கோவையில் கமல் கட்சி சார்பாக நடிகை கோவைசரளா பிரச்சாரம் செய்வதற்கு வந்திருந்தார். அப்போது அவர் பேசும் போது பாஜகவினர் சிலர் எதிர் குரல் கொடுத்ததும் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் ஏறி அங்கிருந்து பறந்து சென்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்