தஞ்சை பாராளுன்றத் தொகுதியில போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வாஜ்க்கு எதிராகவும் அவர் சார்ந்துள்ள இன பெண்களை இழிவாகவும் பேசி வெளியான ஆடியோ குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஊர்வலம் செல்லும் வழியில் சில கடைகள் உடைக்கப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் முற்றுகை போராட்டம் தொடர்ந்ததால் பதற்றம் அதிகமாகி போலிசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் பொன்னமராவதி பேருந்து நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். தகவல் அறிந்து சுற்றியுள்ள 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை மறியல்கள் தொடங்கியது. மேலும் புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி, துவரங்குறிச்சி செல்லும சாலைகளில் தடுப்புகளை வைத்தும் மரங்களை வெட்டிப் போட்டும் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட எஸ். பி. செல்வராஜ் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆடியோ வெளியிட்டவர்களை பிடிக்க ஒத்துழைப்புக் கொடுங்கள் என்று கேட்டார். ஆனால் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் போலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த பிரச்சனையில் போலீசார் மீது கல்வீச்சு நடந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
