Skip to main content

வாட்ஸ் - அப் நிறுவனம் கொடுத்த தகவல்: ஆடியோ பரப்பிய சிறுவன் உள்பட  3 பேரிடம் விசாரணை

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

 

கடந்த 16 ந் தேதி தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில்  பிரச்சாரங்கள் முடியும் நிலையில் பரபரப்பான ஆடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.    அதே தஞ்சை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓய்வு ஆசிரியர் செல்வராஜ் மற்றும் அவர் சார்ந்துள்ள சமூக பெண்களை இழிவாக பேசிய அந்த முகம் மறைக்கப்பட்ட ஆடியோ வடிவிலான வீடியோ பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. 

 

a

 

அந்த ஆடியோவில் உள்ள இரு  குரல்களும் பட்டுக்கோட்டை பகுதியில் மட்டும் பேசக்கூடிய வட்டார வார்த்தைகளில் பேசப்பட்டிருந்தது. தேர்தல் முடியும் வரை அந்த ஆடியோவால் பிரச்சனை இல்லை என்றாலும் வாக்குப் பதிவு நாளில் இரவில் புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி பகுதியில் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தநாள் தடியடி கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது.   சாலைகள் முடக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பற்றிக் கொண்டது.

 

இந்த நிலையில் ஆடியோ வெியிட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட போலிசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.  வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியையும் நாடினார்கள்.  


வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்த தகவலின்படி விசாரணை மேற்கொண்ட நிலையில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரிசல்காடு செல்வகுமார் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வரும் போது  சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் சொன்ன தகவலின்படி பட்டுக்கோட்டை பள்ளிக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்கிற வசந்தகுமாரும் கைது செய்யப்பட்டார். 


இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஆலங்குடி வாராப்பூர் நெரிஞ்சிப்பட்டி சக்தி என்கிற சத்தியராஜ் கைது செய்யப்பட்டார்.  

 

 அதே போல இன்று சம்மந்தப்பட்ட ஆடியோவை வாட்ஸ் அப்களில் பரப்பியதாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த சேதுபாவாசத்திரம் சபரி (18), ரெட்டவயல் சீகன்காடு பாலாஜி (19), தொந்துப்புளிக்காடு (17) ஆகிய மூவரை புதுக்கோட்டை போலிசார் அழைத்து வந்து விசாரனை செய்து வருகின்றனர்.   மேலும்., சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வர உள்ள மேலும் 3 நபர்களை புதுக்கோட்டை பொன்னமராவதி போலிசார் பிடித்து விசாரணை செய்ய காத்திருக்கின்றனர்.  விசாரணை முந்த பிறகு கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்