Skip to main content

'ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு இடைக்காலத் தடை' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

television advertisement high court madurai bench

 

 

ஆபாசத்தைப் பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு தடைக்கேட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் (12/11/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான ஆபாச மருத்துவ விளம்பரங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியம் தொடர்பான ஆபாச விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் மத்திய தகவல் தொழில்நுட்ப செயலாளர், திரைப்பட சட்டத்துறை செயலாளர், தமிழ் செய்தி மற்றும் திரைப்படத் தொழில்நுட்பத்துறை செயலரும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்