திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்களை சுதந்திரதினத்தன்று வீடு வீடாக சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் சோ.ராமு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்களை சுதந்திரதினத்தன்று வீடு வீடாக சென்று சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் சோ.ராமு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று, மண் உண்டியல், துணிப்பை, கல்வி உபகரணங்கள், வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடக்குறிப்பேடுகளை அசத்திய ஆசிரியர் ராமு அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களே என்று ஆசிரியர் சோ.ராமு பெற்றோர்களை பாராட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 160 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 2018-19ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் (ஆங்கிலவழி கல்வி) தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாகவும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பாகவும் இருக்க பள்ளியின் ஆசிரியர் சோ.ராமு முதல் வகுப்பில் அரசு பள்ளியை நம்பி பெற்றோர்களை பாராட்டும் வகையில் எஸ்.பாறைப்பட்டியில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவனுக்கு சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலன் தரும் மரக்கன்றுகள், மண் உண்டியல், துணிப்பை, கல்வி உபகரனங்கள் மற்றும் வீட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பாட திட்ட குறிப்புகளை வழங்கினார்.
வீடு வீடாக சென்று பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டிய ஆசிரியர் சோ.ராமுவிடம் தங்கள் பிள்ளைகளை அடுத்து ஆண்டும் அரசு பள்ளியில் சேர்ப்போம் என பெற்றோர்கள் உறுதியளித்தனர். இது குறித்து எஸ்.பாறைப்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சோ.ராமு கூறுகையில், ஒவ்வொரு சுதந்திரதினத்தன்றும் தமிழக முதல்வர், மற்றும் மாவட்ட ஆட்சியர் சுதந்திர போராட்ட தியாகிகள், வல்லுநர்கள் மற்றும் தீர செயல்கள் புரிந்தவர்கள், சமூக சேவர்களுக்கு விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கிறார்கள். அரசு பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில் எங்கள் ஊரில் உள்ள (எஸ்.பாறைப்பட்டி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்களை மனம் உவந்து சேர்த்த பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் நான் புதிதாக சேர்க்கப்பட்ட 20 மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சால்வை அணிவித்து பாராட்டினேன். கனி தரும் மரக்கன்றுகளை கொடுத்துள்ளேன். 6 மாதம் கழித்து நல்ல நிலையில் மரக்கன்றுகளை வளர்த்த மாணவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை பரிசு தருவேன் என கூறியுள்ளேன் என்றார்.
ஆசிரியர் ராமுவின் சேவையை பாராட்டி அடுத்த வருடம் வீட்டில் உள்ள சிறுவர்களையும் அரசு பள்ளியில் சேர்ப்போம் என மாணவர்களின் பெற்றோர்கள் உறுதியளித்துள்ளனர். இது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
ஆசிரியர் சோ.ராமு பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிந்து ஆசிரியர் பணி கிடைத்தவுடன் நிருபர் பணியில் இருந்து விடுபட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு உயர்தர கல்வியை கற்றுத்தந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை மேம்படுத்தி வரும் ஆசிரியர் சோ.ராமுவை பாராட்ட விரும்புவர்கள் 9843406805 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கலாம்.