Skip to main content

திருவாருர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மறியல்; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
k

 

 திருவாரூர் அருகே கோமல் ஊராட்சியில் உடனடியாக பாசன வாய்க்கால்களை தூர் வாரிட வலியுறுத்தி சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது ஆனார்கள்.

 

k

 

திருவாருர் மாவட்டம் திருக்காரவாசல், கோமல், ராதாநஞ்சை, பிச்சைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இந்த பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர் வாரப்படாததால் சம்பா விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தண்ணீர் கிடைக்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என பல முறை பொதுப்பணித்துறையினரிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

k

 

இதனையடுத்து இந்த கிராமங்களில் உள்ள வாய்க்கால்களை  உடனடியாக   தூர் வார பொதுப்பணித்துறையை வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கோமல் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த மறியல் போராட்டம் காரணமாக திருவாருர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்