Skip to main content

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கைது!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020


 

teacher money dindigul district police


திண்டுக்கல்லில் ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரியை போலீசார் அதிரடி கைது செய்தனர்.
 


திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடியைச்  சேர்ந்தவர் டேஸ்மி கிறிஸ்டினா. இவர் வட மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல் முத்தழகுபட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியிடம், இது குறித்து டேஸ்மி கிருஷ்டினா புகார் தெரிவித்தார்.

அப்போது அவர் உங்களுக்குச் சேர வேண்டிய நிலுவை சம்பளத் தொகை மற்றும் பணம் பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டேஸ்மி கிருஷ்டினா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரியை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஆசிரியையிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அந்தப் பணத்தை மாவட்ட கல்வி அதிகாரிகளும் கொடுக்கும்படி கூறினார். இதற்கிடையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.
 

 


அப்போது அங்குச் சென்ற ஆசிரியை டேஸ்மி கிருஷ்டினா தான் கொண்டுவந்த ஐந்து ஆயிரத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி திடீரென தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறியதன் பேரில் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Old woman incident by pillow; Police investigation

திருப்பத்தூரில் தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அனுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது, மூதாட்டி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அமுக்கி வைக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும்  வேலூர் சாரா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் உறவினர்கள் ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து கைரேகை பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்காயம் அருகே மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.