Skip to main content

மின் மயானத்தில் ஷட்டர் கோளாறு; அமைச்சரின் நடவடிக்கையால் உடனடி தீர்வு..!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

Disorder in the Electrical Cemetery; Immediate solution by the action of the Minister

 

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் ஆர்.எம். காலனியில் உள்ளது. இந்த மின் மயானத்துக்கு நகர்ப் பகுதிகள் மட்டுமல்ல, கிராம பகுதியில் இருந்தும் இறந்தவர்களின் உடல்களைத் தினசரி கொண்டுவந்து தகனம் (எரித்து) செய்துவிட்டு போவது வழக்கம். இந்த மின் மயானத்தில் தினசரி பத்து பேர்களின் உடல்கள்  தகனம்  செய்வது வழக்கம். ஆனால், தற்போது கரோனா காலம் என்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தொற்றால் இறந்தவர்கள் என தினசரி 20 முதல் 25 வரை இறந்தவர்களின் உடல்கள் மின்மயானத்திற்கு எரியூட்டுவதற்கு வருகின்றன. 

 

அதனால் காலை 7 மணி முதல் இரவு 12 மணிவரை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதோடு மின் உபயோக பொருட்களும் தொடர்ந்து நெருப்பில் இருப்பதால், சூடு தாங்காமல் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு திடீரென ஷட்டர் பழுதாகிவிட்டது. இதனால் இறந்தவர்களின் உடல் எரியூட்டும் செய்யும்போது அதனுடைய புகை குழாய் மூலம் போகாமல் கீழேயே கரும்புகையாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மருதாணிகுளம், ராமநாதபுரம், கோவிந்தாபுரம், ஆர்.எம்.காலனி உட்பட சில பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டுவருவதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அந்தப் புகையை சுவாசித்தால் மூதாட்டி ஒன்று மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார். அதோடு துர்நாற்றமும் வீசிவருவதால் அப்பகுதிகளில் வண்டி வாகனங்களில் செல்லக் கூடிய மக்களும் அந்தப் புகையை சுவாசிக்க கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டும்வருகிறார்கள். அப்படி இருந்தும் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைப்பிடித்துவந்தனர்.

 

Disorder in the Electrical Cemetery; Immediate solution by the action of the Minister

 

இந்த விஷயத்தை பி.ஏ. தண்டபாணி மூலம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் காதுக்கு கொண்டு சென்றதின் பேரில், உடனடியாக மாநகராட்சி கமிஷனரை தொடர்புகொண்டு மின் மயானத்தில் உள்ள ஷட்டர் குளறுபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும், மின்மயானத்தில் வெளியேறும் புகை எப்போதும்போல் குழாய் மூலம்தான் வெளியேறுமே தவிர, குடியிருப்பு பகுதிகளுக்குள் போகக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டார். அதோடு அதிமுக ஆட்சியில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் நாகல் நகர் வேடபட்டி மின் மயானத்தையும் உடனடியாக சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகளும் மின்மயானத்தில் உள்ள ஷட்டர் குறைபாடுகளையும், கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மின்மயானத்தையும் சரி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற  அமைச்சர் ஐ.பெரியசாமி!  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin
கோப்புப்படம்

கடந்த 20ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து  நேற்று  சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் மானிய  கோரிக்கையைச் சமர்ப்பித்தார். அதுபோல் மதியம் சமூக நலத்துறை அமைச்சர்  கீதாஜீவன் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.  

அதைத் தொடர்ந்து இன்று 3வது நாளான ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் மானிய கோரிக்கை சமர்பிப்பதை யொட்டி கிரீன் சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான  ஐ.பெரியசாமியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர பகுதி  செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர்கழக நிர்வாகிகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே அமைச்சர் வீட்டிற்கு மாலைகள் சால்வைகளுடன் வந்தனர். இப்படி அமைச்சரை  வாழ்த்த வந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் இல்லத்தில் காலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin

அதன்பின் சரியாக 8.15 மணிக்க  அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு  கூடியிருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லாம் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மானிய  கோரிக்கைச் சம்மந்தமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நடப்பு ஆண்டில் தனது துறையில் நடைபெற்ற திட்டப்பணிகளையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில்  தனது மானிய கோரிக்கை மூலம் சமர்ப்பிக்க இருக்கிறார். 

Next Story

“அரசின் சாதனை திட்டங்களை சொன்னாலே  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறலாம்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
You can get a huge victory in  by-elections if you tell the govt achievements says Minister I. Periyasamy

ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திண்டுக்கல் மாநகரில்  உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனு மற்றும்  கிராமங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை  மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். 

அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்ட  தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து களப்பணி ஆற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் பணியாற்றக்கூடிய  பகுதிகள் குறித்து கேட்டறிந்ததோடு வரலாறு காணாத வெற்றியை பெறும்  அளவிற்கு ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில்  ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.   

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில்  40க்கு40 பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் அனைத்து  கிராமங்களும் தன்னிறைவு பெற்று வருகின்றன. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை  மூலம் அனைத்து கிராமங்களும் சாலை வசதி, குடிதண்ணீர், தெருவிளக்கு வசதி  நூறு சதவிகிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் மூலம்  லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று தங்கள் விளை பொருட்களை  அருகில் உள்ள நகரங்களுக்கு சிரமமின்றி எடுத்துச் சென்று பயன்பெற்று  வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழகம் முதல்வரின் சாதனை  திட்டங்களையும், மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் மற்றும் பெண்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் சென்று  எடுத்துரைத்தாலே எளிதாக மாபெரும் வெற்றி பெறலாம்” என்று கூறினார்!