மாணவியைக் கடத்திச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான முபாரக் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து, பள்ளி மாணவியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனை வைத்து, முபாரக்கை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பின்னர், மாணவியைப் பத்திரமாக மீட்டனர்.
இதனிடையே, முபாரக்கை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.