Published on 20/12/2024 | Edited on 20/12/2024
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருந்த மறைந்த பாஷாவின் உடலுக்கு இறுதி ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததைக் கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்து இருந்தனர். இந்நிலையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற பாஜகவினர் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.