



Published on 03/11/2020 | Edited on 03/11/2020
இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை கேலி சித்திரமாக வரைந்தவர்களை ஆதரிக்கும் பிரான்ஸ் அதிபரை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னை ஆர்.கே. சாலையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் கொடியை எரித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.