Skip to main content

நக்கீரன் நியூஸ் எஃபெக்ட்! அதிரடி விசாரணையில் சிறைத்துறை டி.ஜி.பி! (எக்ஸ்க்ளூசிவ்)

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேட்டில் கைதான புரோக்கர் ஜெயக்குமாருக்கு  ஸ்பெஷல் ரூம், நாட்டுக்கோழி குழம்பு, மட்டன், வெஸ்டர்ன் டாய்லெட் என சிறையில் சொகுசு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதை எக்ஸ்க்ளூஸிவாக அம்பலப்படுத்தினோம். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் ஐ.பி.எஸ்.
 

ஜெயக்குமாருக்கு சொகுசு சலுகைகள் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே ஹை செக்யூரிட்டி- 2 வில் 54 வது அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். மேலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க ஜெயக்குமாரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் முயற்சி எடுத்தார்கள் சிறை அதிகாரிகள். நக்கீரனில் அம்பலப்படுத்தியதால் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகி வருகிறார் ஜெயக்குமார்.

tamilnadu prison dgp investigation

அதாவது, 2020 பிப்ரவரி 7 ந்தேதிலிருந்து 14 ந்தேதிவரை புரோக்கர் ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி. கஸ்டடி விசாரணையில் இருந்ததால் பிப்ரவரி 15,16,17,18 தேதிகளில் சிறையில் இருந்துள்ளார். பிப்ரவரி 19 ந்தேதியிலிருந்து 24 ந்தேதிவரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்ததால் பிப்ரவரி 25, 26,27,28,29, மார்ச்-1  தேதிகளில் சிறையில் இருந்துள்ளார்.
 

மார்ச் 2 ந்தேதியிலிருந்து 5 ந்தேதிவரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்ததால் மார்ச் 6, 7, 8, 9, 10, 11, 12 தேதிகளிலிருந்து தற்போது வரை புழல் மத்தியச் சிறையில் தொடர்கிறார் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைதான ஜெயக்குமார். 
 

புழல் சிறை வளாகத்திற்குள் இரண்டு விதமான சிறைகள் உள்ளன. பிரிசன்-1 என்பது நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறை.

tamilnadu prison dgp investigation

பிரிசன் -2 என்பது காவல்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை.
 

விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிரிசன் -2 வில் ஐந்துவிதமான ப்ளாக்குகள் உள்ளன.

1) குவாரண்டின் ப்ளாக்

2) 1,2,3, 4, 5 ப்ளாக்குகள்

3) ஹெச்.எஸ் எனப்படும் ஹைசெக்யூரிட்டி-1

4) ஹெச்.எஸ். எனப்படும் ஹைசெக்யூரிட்டி-2

5) பிரிசன் டிஸ்பெஞ்சரி
 

இதில், குவாரண்டின் ப்ளாக்கில் சிறியது, பெரியது, தனிநபர் என 25 செல்கள் அதாவது அறைகள் உள்ளன. சிறிய அறைகளில் சுமார் 20 கைதிகள், பெரிய அறைகளில் சுமார் 50 கைதிகள், தனிநபர் அறையில் 1 அல்லது 2 கைதிகள் தங்கவைக்கப்படுவார்கள். டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைதான 50 க்குமேற்பட்டவர்கள் இந்த ப்ளாக்கில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்குதான், ஜெயக்குமாரும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சொகுசாக தங்க வைக்க வேண்டும் என்பதற்காக ஹை செக்யூரிட்டி-2 ப்ளாக்கில் 54 வது அறையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை சககைதிகளால் ஆபத்து என்றால் 1,2,3,4,5 ப்ளாக்குகளில் தங்க வைத்திருக்கலாம்.
 

1,2,3,4,5 ப்ளாக்குகளில் 1 வது ப்ளாக்கில் 25 அறைகள், 2,3,4 ஆகிய ப்ளாக்குகளில் 20 அறைகள், 5 வது ப்ளாக்கில் 15 பெரிய அறைகள் உள்ளன. இந்த,  ஐந்தாவது ப்ளாக்கில் 9,10 வது அறைகளில் வெஸ்டர்ன் டாய்லெட் வசதிகள் உள்ளன. கை கால் முறிந்து வருகிற கைதிகளுக்கு 9 வது அறையிலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதிய கைதிகளுக்கு 10 வது அறையிலும் பயன்படுத்திக் கொள்ளவே இந்த வசதிகள்.
 

ஹை செக்யூரிட்டி-1 மற்றும் 2 வில் தலா ஐந்து  சப்-செல்கள் உள்ளன. ஹை செக்யூரிட்டி-1 ல் 58 கைதிகள், ஹைசெக்யூரிட்டி 2 வில் 58 கைதிகள் தனித் தனியாக அடைக்கப்பட்டிருப்பார்கள். இதில், ஹை செக்யூரிட்டி -2 வில் 54 வது அறையில்தான் ஜெயக்குமார் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
 

பிரிசன் டிஸ்பெஞ்சரியில் 5 அறைகள் உள்ளன. இதில்தான்,ஸ்வாதி கொலையில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி ராம்குமார் மர்ம மரணம் அடைந்தான்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ளாக்கில்தான் போலீஸ் பக்ரூதின் அடைக்கப்பட்டிருக்கிறார்.
 

சிறைதண்டனக்கூட கொடுக்கவில்லை என்றால் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிமுக அரசு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.