5.56 லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் இன்று (12/01/2021) காலை சென்னை வருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "புனேவில் இருந்து விமானத்தில் 5,56,500 கரோனா தடுப்பூசிகள் இன்று (12/01/2021) காலை 10.30 மணிக்கு சென்னைக்கு வருகிறது. 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 'சீரம்' நிறுவனத்திடம் இருந்து வருகின்றன. 'பாரத் பயோ டெக்' நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வருகின்றன.
ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்குப் போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது" என்றார்.