தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை கடந்த 1 வருடமாகவே மாற்றப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் மாறி மாறி இப்போ மாறிடுவார். அப்போ மாறிடுவார் என்று ஆருடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
திருநாவுகரசர் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியல் எல்லோரும் அவருடைய ஆதரவாளர்கள், அவர்களில் பெரும்பாலனோர் பிஜேபி கட்சியில் இருந்தவர்கள், காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர்களை புறக்கணிக்கிறார் என்கிற குற்றசாட்டும், டிடிவியுடன் தன் ஜாதி பாசத்தில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்துகிறார் தேர்தல் நேரத்தில் இது பெரிய பின்னடைவையும், காங்கிரஸ் கட்சிக்காரர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்கிற குற்றசாட்டுகளை காங்கிரஸ் தலைமையிடத்திற்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திருநாவுகரசரை மாற்றாமல் வர மாட்டேன் என்று இளங்கோவன் டெல்லிக்கு சென்ற போது ராகுல் வெளிநாடு சென்றிருந்தார்.
ஆனால் இளங்கோவனோ நான் ராகுல் டெல்லி வந்தவுடன் சந்தித்து விட்டே செல்கிறேன் என்று சொல்லி 3 நாள் காத்திருந்து ராகுல் காந்தியை சந்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் ஏன் மாற்றப்பட்டார்? காங்கிரசில் இருக்கிறாரா? பெரிய அளவில் தொண்டர்களுக்கு அறிமுகம் இல்லாத கே.எஸ். அழகிரிக்கு மாநிலத் தலைவர் பதவி எப்படி? என தமிழக அரசியல் பிரமுகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்கும் மத்தியில் சிறப்பாக செயல்பட்ட திருநாவுக்கரசரை ஆரம்பத்தில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரடியாக விமர்சனம் செய்து வந்தாலும் சிதம்பரம் சத்தம் இல்லாமல் எதிர்த்துக் கொண்டே தான் இருந்தார் என்கின்றனர்.
திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள். கடந்த மாதம் 21ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சக்தி ஆப் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட திருநாவுக்கரசர் ‘ விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே சக்தி ஆப்பை விரைவில் கொண்டு செல்வது நமது கடமை. நான் தேர்தல் முடியும் வரை தலைவராக இருப்பேன். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மேலிட உத்தரவை கேட்டு செயல்படுங்கள் என்று பேசினார். இதை தமிழில் சொல்லிவிட்டு அதே வேகத்தில் ஆங்கிலத்திலும் சொன்னார். அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசின இந்த பேச்சு தான் திருநாவுக்கரசரின் மாற்றத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த பேச்சு வீடியோ தான் ராகுலிடம் கொண்டு செல்லப்பட்டது.
வழக்கமாக மாநிலத் தலைவர் மாற்றம் என்றார் யாருக்கும் தெரியாது. திருநாவுக்கரசர் மாற்றப்படும் போது. அவரை கூப்பிட்டு சமாதானப்படுத்தி பின்பு புதிய தலைவர் அறிவிப்பை வெளியிட்டது. திருநாவுக்கரசரோ காங்கிரஸ் தலைமையிடம் தனக்கு இந்த தேர்தலில் சீட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதுவும் திருச்சி வேண்டும் என்று கேட்டிருக்கிறார் இத்தோடு நாளை ராகுல்காந்திப்புக்கு சந்திப்புக்கு நேரம் கொடுத்திருக்கிறார்கள் அதில் இதை சீட்டையும், தேசிய அளவிலான பொறுப்பு ஒன்றும் கொடுப்பார்கள் என்கிறார்கள்.
புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி யார்?
பிறந்த வருடம்-1952. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், அண்ணாமலை பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். 1991 மற்றும் 96 –ல் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.2009-ல் கடலூர் எம்.பி.தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்தவரை அவரின் தீவிர விசுவாசி. இப்போது, அழகிரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்.