இன்று காலை மேட்டூரில் நீர் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ''அவர் பூமிக்கு பாரமானவர்'' என விமர்சித்திருந்தார். மேலும், மக்களை தினமும் நாங்கள் சந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபொழுது என்ன செய்திருக்கிறார் தமிழ்நாட்டிற்காக, அவருக்கு தேவையல்லாம் அதிகாரம்தான் எனக் கூறினார்.
![Can a CM speak like this? - Karthik Chidambaram Question](http://image.nakkheeran.in/cdn/farfuture/MgWseD_ey7-Sfl9lcDBMg_yH0KfFNEJy0DwdGUe7nxs/1565683995/sites/default/files/inline-images/z40.jpg)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பூமிக்கு பாரமானவர் என முதல்வர் எடப்பாடி விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில்,
ஒரு முதல்வர் முன்னாள் மத்திய அமைச்சரை பற்றி பேசக்கூடிய வார்த்தைகளாக அவை. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரு மத்திய நிதியமைச்சரை, ஆசியாவிலேயே சிறந்த நிதி அமைச்சர் என பெயர் வாங்கியவரை சரித்திர பிழையால் முதல்வர் பதவிக்கு வந்தவர் இப்படி பேசலாமா. அவர் மனதிற்கே அவர் சொன்னது உறுத்தும், அவர் சாமி கும்பிடும் பழக்கம் உள்ளவர் எனவே நாளை காலை அவர் சாமி கும்பிடும் போது அவர் மனதே இப்படி சொல்லிவிட்டோமே என உறுத்தும் என்றார்.