மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும், இழந்த தமிழர் உரிமைகளை மீட்க என்ன செய்யலாம் என பேசுவோம் என்ற தலைப்புடன் இன்று மாலை இந்த பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.
அண்மையில் தேசதுரோக மற்றும் உபா வழக்கில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது விடுதலைக்கு பிறகு முதன்முறையாக இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
இந்த பொதுக் கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்தில் நடக்கவிருக்கும் பேச்சுக்கள் உளவுத்துறை கண்காணிக்க வேண்டும் என உளவுத்துறைக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இருந்தால் வழக்கு பதிவுசெய்யவும் அறிவுறித்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.