Published on 13/09/2019 | Edited on 13/09/2019
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்.
![tamilnadu 5th and 8th std board exam tn govt announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/fDqhs9n1syrddxWIMKbEanrCwbD4FhQ4Kcqf756-iM0/1568383105/sites/default/files/inline-images/Tsunami11.jpg)
மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.