செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்,
வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் தூண்கள் எங்கெங்கெல்லாம் பதிக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கிறது. அது முந்தைய ஆட்சியாக இருந்தாலும் சரி தற்போது இருக்கின்ற ஆட்சியாக இருந்தாலும் சரி கோவில்களை பாதுகாக்கவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. அதேபோல் கல்வி நிலையங்களும் பாதுகாக்கபடவில்லை வியாபாரமாகி கொண்டிருக்கிறது எனவும் தெரிகிறது.
தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு,
அது தர்மயுத்தமா? அல்லது தர்மசங்கடமான யுத்தமா? என்று எனக்கு தெரியாது. அது அவர்களுக்குள்ளே நடந்துகொண்டிருக்கும் ஒரு போர். இதில் என் கருத்து ஒன்றும் இல்லை. சில நேரங்களில் இதற்கு முன்னால் தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சியை சேர்த்தவர்களை சந்திக்கவும் தூதுகள் விட்டிருக்கிறார்கள். துணை முதல்வர் எந்த சூழ்நிலையில் அவரை சந்தித்தேன் எனக்கூறியுள்ளார். இன்றுள்ள அரசியல் சூழலில் தற்போது இது பரபரப்பாக பேசப்பட்டாலும் இதனால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. ஆனால் தினகரன் மற்றும் அவரது கட்சியை சார்ந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எனக்கூறினார்.