Published on 20/07/2022 | Edited on 20/07/2022

காமன்வெல்த் போட்டியிலிருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 215 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர் இதில் 36 பேர் தடகள வீரர்களாக இருக்கும் நிலையில் தமிழகம் சார்பில் பங்கேற்க இருந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளியானது. காமன்வெல்த் போட்டியில் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் விளையாட இருந்த அணியில் இடம்பெற்றிருந்த தனலட்சுமி காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.