



Published on 01/06/2020 | Edited on 01/06/2020
தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிபந்தனைகளுடன் சென்னையில் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட சலூன் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். ஊழியர்கள் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.