இந்தியாவில் கரோனா வைரஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட எட்டு மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு பல தளர்வுகளுடன் முழு முடக்கம் விலக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய தடுப்பூசியான கோவாக்ஸின் மற்றும் அமெரிக்க தடுப்பூசியான கோவிஷீல்ட் ஆகியவை சந்தைக்கு வந்தது.
இத்தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததும், முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன் பிற்கு சில காலங்களி 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இத்தடுப்பூசிகள் இரு தவணைகளாக பயனாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி பணியில் முதல் கட்ட டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள காத்திருந்த நிலையிலேயே மத்திய அரசு மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவரக்ளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. அதிலும், மாநில அரசுகள்தான் 18 முதல் 44 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி இலவசமா அல்லது விலை கொடுத்து செலுத்திக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவித்தது.
45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான இரண்டாம் டோஸ் முறையாக கிடைக்காமல் அவதிக்குள்ளாகிக்கொண்டிருந்தபோதே மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோர்கான தடுப்பூசியை அறிவித்தது பல விமர்சனங்களை எதிர்க்கொண்டது. அதேபோல், 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசிக்கும் தடுப்பாடு ஏற்பட்டது.
ஒரு கட்டம் வரை மத்திய அரசு மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை பிரித்து வழுங்கும் என்று தெரிவித்தது. பிறகு, மாநிலங்களே கரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆனாலும், மத்திய அரசுக்கு ஒரு விலையாகவும் மாநில அரசுகளுக்கு ஒரு விலையாகவும் இருவேறு விலைகளை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் அறிவித்து. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. பிறகு தடுப்பூசி மருந்து நிறுவனம் மாநிலங்களுக்கான விலையில் சற்றுகுறைத்தது.
இருந்தபோதும் சீரான தடுப்பூசி விநியோகம் கிடைக்காமல் இருந்ததுவந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியுள்ளது. மூன்று மாதங்களில் ஐந்து கோடி தடுப்பூசிகள் வழங்க தயாரகவுள்ள நிறுவனங்கள் ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கோரியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு 20 கோடி தடுப்பூசிகள் வழங்கிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.