தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல் விடுத்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (28.01.2024) நாகைக்கு செல்ல உள்ளார். அதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும். இன்று மாலை 06.30 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அதிகாலை 06.30 மணிக்கே வர வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்தீப்பீர்கள். வருகை பதிவேட்டில் கைப்பேன் என மாணவ மாணவிகளுக்கு நர்சிங் கல்லூரி முதல்வர் இளவேந்தன் மிரட்டல் விடுத்துள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏறபடுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இந்த நர்சிங் கல்லூரி நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.