Published on 08/04/2023 | Edited on 08/04/2023

அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த 2017 - 2021 ஆம் ஆண்டு வரை எடப்பாடி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி புகார் எழுந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது அதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.