தேசிய அளவிலான போட்டிகள் தலைநகர் டெல்லியில், கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சியிலிருந்து கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் சுருள் வீச்சு, கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும், 16 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான போட்டியும் நடைபெற்றது. இதில், பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருச்சியைச் சேர்ந்த மாணவி சுனிதா தங்கப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு நேற்று திருச்சி வந்தடைந்த வீரர் வீராங்கனைகளை திருச்சி ரயில்வே நிலையத்தில் வரவேற்று அவர்களுக்கு தன்னுடைய நினைவுப் பரிசாகப் புத்தகங்களை வழங்கி, ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்களைக் கௌரவித்துப் பாராட்டினார்.