Skip to main content

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

 

Students wishing to pursue higher education are invited to apply for a scholarship!


உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, "சேலம் மாவட்டத்தில் உள்ள 363 அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் நடப்பு ஆண்டு 39649 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ளனர். 

 

உயர்கல்வி படிக்க ஆர்வமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்விக்கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் கல்விக்கடன் முனைப்புத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலமாக கல்விக்கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் வங்கிக் கடன் வசதியைப் பெற, www.vidyalakshmi.co.in என்ற அரசு இணையதளத்தில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 

 

மாணவர் மற்றும் பெற்றோரின் வங்கி சேமிப்புக்கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, கல்லூரியில் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டுக் கடிதம், கல்விக்கட்டண விவரம் ஆகியவற்றை சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். 

 

இந்தக் கல்விக்கடன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள, மாணவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிகளில் பொறுப்பாசிரியர் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டப்பட்டு வருகிறது. மேலும், ஆலோசனை வழங்க, மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள அறை எண் 211- ல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. 

 

இத்துடன் 0427- 2414200 என்ற தொலைபேசி எண்ணும், 93427- 52510 என்ற வாட்ஸ்ஆப் எண்ணும், salemeducationalloan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். 

 

இது தொடர்பான விவரங்களை சேலம் மாவட்ட நிர்வாக இணையதளமான www.salem.nic.in என்ற இணைய தளத்திலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்