மாணவிகள் கொலுசு அணிவதால் மாணவர்களின் கவனம் திசைத் திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டைன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. காலிப்பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு வருகிறது. முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.
மாணவிகள் கொலுசு மற்றும் பூ அணிந்து வருவதற்கு தடை விதிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், மாணவிகள் கொலுசு அணிந்து வரும்போது, அந்த சலங்கை சத்தம் கேட்கின்றபோது மாணவர்களின் படிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கவனம் சிதைகிறது. பூ வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.