கரூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கைது செய்யப்பட்ட அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவனின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் மாணவிகளின் தொடர் போராட்டத்தினால் தள்ளுபடி செய்த நீதிபதி மாணவிகளிடம் விசாரணையும் நடத்தினார்.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த இளங்கோவன், தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்த கல்லூரி மாணவிகள் மாவட்ட காவல்துறை, மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் புகார் கொடுத்தும் முறைய நடவடிக்கை இல்லாமல் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்த நிலையில் மாணவிகளின் நீண்ட போராட்டத்துக்குப் பின் கைது செய்யப்பட்டு 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதியப்பட்டு கரூர் சிறையில் அடைக்கப்பட்டார் ராட்சஷ படத்தில் வில்லன் பேராசிரியர் இளங்கோவன், ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தான்.
அந்த மனு மீதான விசாரணை விசாரணைக்கு வருவதை அறிந்த மாணவிகள், நீதிமன்ற வளாகத்தில் திரண்டு, அவனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கோஷங்கள் போட ஆரம்பித்தனர். மாணவிகள் தீடிர் என நீதிமன்றத்திற்கு வருவதை பார்த்த நீதிபதி பாதிக்கப்பட்ட 10 மாணவிகளை தனித்தனியாக அழைத்து வாக்குமூலம் பெற்ற நீதிபதி, இளங்கோவனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மாணவிகளின் போராட்டம் நீதிமன்றத்தின் வெளியே நடைபெற்றதும். அவர்களை நீதிபதியே நேரடியாக அழைத்து விசாரணை செய்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் மாவட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.