விருத்தாசலத்தில் கள்ளத் தனமாக இயங்கிய மது குடிப்பகங்களை டாஸ்மாக் அலுவலர்கள் அடித்து நொறுக்கினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக அரசின் அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகிறது. அவ்வாறு இயங்கும் மதுபான கடைகளில் அரசின் அனுமதி பெறாமல் கள்ளதனமாக மதுகுடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இது பற்றி தகவலறிந்த டாஸ்மாக் அதிகாரிகள் முதுநிலை மண்டல மேலாளர் வேலுச்சாமி தலைமையில் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள அரசு மதுபானக்கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது சில மதுக்கடைகளில் அனுமதியில்லாமல் மது குடிப்பகங்கள் (பார்கள்) மூலம் தண்ணீர் பாக்கெட், கூல்டிரிங்க்ஸ், உணவு வகைகள் விற்று வந்தனர்.
அதைப்பார்த்த அதிகாரிகள் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த பார்களில் இருந்த சிலிண்டர் மற்றும் ஸ்டவ் அடுப்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் மது பிரியர்கள் அமர்ந்து குடிப்பதற்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள் மேசைகளை சுத்தியல் கொண்டு அடித்து உடைத்தனர்.