
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும் மருத்துவ மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட 2ம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரை படித்துவரும் மாணவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே இந்தக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணமாக வசூலிக்கப்படும் என கடந்த ஆண்டு பிப்-21-ல் அரசாணை 45 வெளியிடப்பட்டது. பின்னர் அரசு அரசாணை 204 வெளியீட்டு தனியார் கட்டணம் ரூ 4 லட்சம் கட்ட வேண்டும் என கூறியதால் மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப் 10-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை 11-நாட்கள் கல்லூரி வளாகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 21-ந் தேதியிலிருந்து வகுப்பை புறக்கணித்து ரத்தத்தால் கை ரேகை வைத்து இடுவதும், கருப்பு உடை அணிந்து கருப்புக்கொடி ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுதியில் உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு மாணவர்கள் ஒருங்கிணைந்து உணவு ஏற்பாடு செய்து சாப்பிட்டு இரவு பகல் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.