Published on 15/08/2019 | Edited on 15/08/2019
இந்திய நாட்டின் 73 வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் 150 அடி நீளம் கொண்ட மூவர்ணக் தேசிய கொடியை உருவாக்கினர், வேலூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை மாணவர்கள் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் புறவழிச்சாலை வழியாக ஊர்வலமாக கொண்டுச்சென்றனர் சென்றனர்.
வந்தே மாதரம் என உணர்ச்சி பூர்வமா சொல்லியபடி சென்றனர். 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளி அருகே முடித்தனர். இந்த ஊர்வலத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் (திமுக) கலந்துக்கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்ததோடு, ஊர்வலத்தோடு நடந்தும் சென்றார்.